க.நா.சு போட்ட ‘படித்திருக்கிறீர்களா?’ என்ற பட்டியல் மிக முக்கியமானது. அன்றெல்லாம் அந்தப் பட்டியல் நல்ல இலக்கிய வாசகர்களிடம் இருக்கும். பலர் அதைக் கையாலேயே நகலெடுத்து வைத்திருந்தார்கள். அவர்கள் தங்களைத் தேடிவரும் புதிய வாசகர்களுக்கு அதைக் கொடுப்பார்கள். சுந்தர ராமசாமி அந்த பட்டியலைத் தட்டச்சு செய்து ஐம்பது பிரதி எடுத்து எப்போதும் கையில் வைத்திருப்பார். எனக்கும் அளித்தார். நான் அதிலுள்ள நூல்களைத் தேடித்தேடி வாசித்து நவீன இலக்கியத்தை அறிந்துகொண்டேன்.





